என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ்க்கு 206 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
- ஜெய்ஸ்வால் 45 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் விளாசினார்.
- ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 18ஆவது ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் பவர்பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. அதன்பின் ரன் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 89 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரியாக் பராக் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 40 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணா 7 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேற 4ஆவது விக்கெட்டுக்கு ரியான் பராக் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி ஸ்கோர் 200-ஐ தொட்டுவிட வேண்டும் நோக்கத்தில் விளையாடியது. 19ஆவது ஓவரில் ஹெட்மையர் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்களும், ஜுரெல் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் உடன் 5 பந்தில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.






