என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதத்தை தவறவிட்ட ஜடேஜா: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா
    X

    சதத்தை தவறவிட்ட ஜடேஜா: 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

    • 11 ரன்னில் சதத்தை ஜடேஜா தவறவிட்டார்.
    • இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா அரைசதமும் கில் 150 ரன்களும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 168 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×