என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இனி பட்டோடி கோப்பை இல்லை.. சச்சின், ஆண்டர்சனுக்கு கவுரவம்
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஓய்வு கொடுத்தது.
அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
அந்த வகையில் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டிக்கான டிராபி பெயரை 'டெண்டுல்கர் -ஆண்டர்சன்' என மாற்றப்பட்டுள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சச்சினையும், அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஆண்டர்சனையும் கவுரவிக்கும் விதமாக இவர்கள் பெயரை சூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






