என் மலர்
கிரிக்கெட் (Cricket)

5 போட்டியில் 4 சதம்: நியூசிலாந்து தொடரில் இடம் கிடைக்காதது குறித்து தேவ்தத் படிக்கல் கருத்து
- நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காது ஏமாற்றமளித்தது என்று சொல்ல மாட்டேன்.
- ஒருநாள் அணிக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல். இடது கை பேட்ஸ்மேனான இவர் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் 5 போட்டிகளில் நான்கில் சதம் விளாசினார். என்றாலும் வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக தேவ்தத் படிக்கல் கூறியதாவது:-
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காது ஏமாற்றமளித்தது என்று சொல்ல மாட்டேன். ஆம், நான் அணித் தேர்வைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன நடக்கப் போகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதே நேரத்தில், அணியில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பதையும், எல்லோரும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.
ஒருநாள் அணிக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மீண்டும் சொல்கிறேன், ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய முயற்சி செய்து, தொடர்ந்து ரன்களைக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.
25 வயதான தேவ்தத் படிக்கல் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளாலர். டெஸ்ட் போட்டியில் 3 இன்னிங்சில் 90 ரன்களும், டி20யில் 38 ரன்களும் அடித்துள்ளார்.






