என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அதிக ஸ்கோர் கொண்ட தொடராக இருக்கும்: ஆனால்,, எச்சரிக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ்
- ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் பெரிய ஜாம்பவான்கள்.
- விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை.
இந்தியா 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி, ரோகித் சர்மா மற்றும் விராட் கொலி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:-
கிரிக்கெட் பயணத்தின்போது ரோகித் சர்மா, விராட் கோலிக்கு எதிராக அதிக அளவில் விளையாடும் பாக்கியம் கிடைத்தது. ஒருநாள் போட்டியில் இரண்டு பேரும் ஜாம்பவான்கள். விராட் கோலியை போன்ற சிறந்த சேஸிங் வீரர் இல்லை. நீங்கள் டிக்கெட் விற்பனையை பார்த்திருப்பீர்கள். ஏராளமான மக்கள் மைதானத்திற்கு வருகை தந்து, அவர்களை பார்க்க விரும்புகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கான மைதானங்கள் நிரம்பியுள்ளதை பார்க்கும்போது, இது எங்களுடைய குரூப்பிற்கு சிறந்த அனுபவமாக இருக்கப் போகிறது.
இந்த தொடர் அதிக ஸ்கோர் கொண்டதாக இருக்கப் போகிறது என்று நம்புகிறென். ஆனால், இரண்டு அணிகளுக்கும் முதல் 10 ஓவர் சவாலானதாக இருக்கும். வெற்றியும், தோல்வியும் அதை பொறுத்து அமையலாம்.






