என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ராபின்சன் அதிரடி சதம்- ஆஸ்திரேலியாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
- நியூசிலாந்து தரப்பில் ராபின்சன் 106 ரன்கள் குவித்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டிம் சீஃபர்ட்- டேவான் கான்வே களமிறங்கினார்கள். இதில் டிம் சீஃபர்ட் 4 ரன்னிலும் கான்வே 1 ரன்னிலும் அடுத்து வந்த சாப்மேன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 6 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து டிம் ராபின்சன்- டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மிட்செல் 23 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக்கப் மந்தமாக விளையாடினார். அவர் 21 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு முனையில் தனி ஆளாக போராடிய டிம் ராபின்சன் சதம் விளாசி அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






