என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச பேட்மிண்டன்: இந்தியாவின் திரிசா-காயத்ரி ஜோடி மீண்டும் சாம்பியன்
    X

    சர்வதேச பேட்மிண்டன்: இந்தியாவின் திரிசா-காயத்ரி ஜோடி மீண்டும் சாம்பியன்

    • இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
    • இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த திரில்லிங்கான ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-21, 21-8, 20-22 என்ற செட் கணக்கில் ஜாசன் குனவானிடம் (ஹாங்காங்) போராடி தோற்றார். இதில் கடைசி செட்டில் 20-20 என்று வரை சமனிலை நீடித்தது. இறுதியில் கடைசி இரு புள்ளிகளை தனதாக்கி குனவான் வெற்றிக்கனியை பறித்தார். இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடங்கள் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹினா அகேச்சி (ஜப்பான்) 21-16, 21-14 என்ற நேர் செட்டில் நேஸ்லிஹான் அரினை (துருக்கி) வீழ்த்தி மகுடம் சூடினார்.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-13, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காகோ ஒசாவா- மை தனாபே ஜோடியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 49 ஷாட்டுகள் அடித்தது ரசிகர்களை பரவசப்படுத்தியது. திரிசா- காயத்ரி ஜோடிக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

    Next Story
    ×