என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய இளைஞர் விளையாட்டு 2025:  இந்தியா கபடி ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்
    X

    ஆசிய இளைஞர் விளையாட்டு 2025: இந்தியா கபடி ஆடவர்- மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

    • ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.

    இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.

    இந்த வெற்றிகளால் இந்தியாவின் மொத்த பதக்கங்கள் 10 ஆக உயர்ந்துள்ளன (2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்).

    தற்போதைய பதக்கப் பட்டியலின்படி, சீனா 7 தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதில் தடகளத்தில் மட்டும் 5 தங்கங்களை வென்றுள்ளது. அவர்களைத் தொடர்ந்து தாய்லாந்து 6 தங்கங்களுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×