என் மலர்
விளையாட்டு

ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
- ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
- இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.
ஆடவருக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி இன்று கம்போடியா அணியை எதிர்கொள்கிறது. இதை போல கால்பந்து போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
Live Updates
- 19 Sept 2023 5:20 PM IST
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியின் முதல் செட்டை 22 நிமிடத்தில் கைப்பற்றிய இந்திய அணி 2-வது செட்டை 19 நிமிடத்தில் கைப்பற்றியது.
- 19 Sept 2023 5:17 PM IST
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-13 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றியது.
- 19 Sept 2023 5:07 PM IST
கைப்பந்து போட்டியின் 2-வது செட்டில் 15- 10 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
- 19 Sept 2023 4:50 PM IST
இந்திய ஆண்கள் கைப்பந்து அணி இடம்பிடித்த வீரர்கள்:
அமித், வினித் குமார், ஷமீமுதீன் அம்மரம்பத், முத்துசாமி அப்பாவு, ஹரி பிரசாத் பெவினகுப்பே சுரேஷ், ரோஹித் குமார், மனோஜ் லக்ஷ்மிபுரம் மஞ்சுநாதா, உக்கிரபாண்டியன் மோகன், அஷ்வல் ராய், சந்தோஷ் சகாய அந்தோனி ராஜ், குரு பிரசாந்த் சுப்ரமணியன் வெங்கடசுப்பு, எரின் வர்கீஸ். - 19 Sept 2023 4:49 PM IST
ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி சி பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவுடன் இன்று மோதுகிறது. நாளை தென் கொரிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
- 19 Sept 2023 4:48 PM IST
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு (2022) நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






