என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு
    X

    ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு

    • 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது.
    • தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

    சென்னை:

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    பிரவீன் சித்ரவேல் (டிரி பிள் ஜம்ப்), செர்வின் (20 கி.மீ. நடைபந்தயம்), தமிழரசு, ராகுல்குமார் (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), விஷால், சந்தோஷ் கமார் (4x400 மீட்டர், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), வித்யா (400 மீட்டர் ஒட்டம், 400 மீட்டர் தடை தாண்டுதல்), அபினயா (4x100 மீட்டர் தொடர் ஓட்டம்), சுபா (4x100 மீட்டர், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்)

    Next Story
    ×