என் மலர்
விளையாட்டு

3வது டி20 போட்டி- இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயம்
- கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
- 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.






