search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி - கேஎல் ராகுல்
    X
    விராட் கோலி - கேஎல் ராகுல்

    குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோதுவது லக்னோவா? பெங்களூரா?

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ‘பிளே ஆப்’ சுற்று நேற்று தொடங்கியது. கொல்கத்தாவில் நடந்த ‘குவாலிபையர்-1’ஆட்டத்தில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    தோல்வி அடைந்த ராஜஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி வருகிற 27-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ‘குவாலி பையர்-2’ ஆட்டத்தில் விளையாடுகிறது.

    ராஜஸ்தானுடன் மோதப்போவது லக்னோவா, பெங்களூரா என்பது இன்று இரவு தெரியும்.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதும் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டிகாக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ், மோஷின்கான், அவேஷ்கான், பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்களும், பெங்களூரு அணியில் கேப்டன் டுபெலிசிஸ், மேக்ஸ்வெல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹசில்வுட், முகமது சிராஜ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    இரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
    Next Story
    ×