search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    176 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம்
    X
    176 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம்

    முஷ்பிகுர் ரஹிம் அசத்தல் - முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்தது வங்காளதேசம்

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.

    முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . பின்னர் 
    இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், ஆஷா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக ஒஷாடா பெர்னான்டோ, கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஒஷாடா பெர்னான்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அரைசதம் அடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
    Next Story
    ×