search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ‘ஏ’ டிவி‌ஷன் கைப்பந்து ‘லீக்’ போட்டியில் இந்தியன் வங்கி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதிய காட்சி.
    X
    ‘ஏ’ டிவி‌ஷன் கைப்பந்து ‘லீக்’ போட்டியில் இந்தியன் வங்கி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதிய காட்சி.

    ‘ஏ’ டிவி‌ஷன் கைப்பந்து ‘லீக்’- சுங்க இலாகா அணிக்கு முதல் வெற்றி

    2-வது போட்டியில் சுங்க இலாகா செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் சுங்க இலாகா 25-20, 25-18, 25-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆச்சி மற்றும் ரோமா குரூப் ஆதரவுடன் ‘ஏ’ டிவி‌ஷன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில் இந்தியன் வங்கி 25-14, 25-22, 28-26 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் சுங்க இலாகா செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் சுங்க இலாகா 25-20, 25-18, 25-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இது சுங்க இலாகா பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீசிடம் தோற்று இருந்தது.

    செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ஐ.ஓ.பி.யிடம் தோற்றது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐ.ஓ.பி.- டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, தமிழ்நாடு போலீஸ் -லயோலா, இந்தியன் வங்கி- எஸ்.ஆர்.எம். அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×