என் மலர்
விளையாட்டு

4 விக்கெட் கைப்பற்றிய வாக்னர்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்தின் வாக்னர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
கிறிஸ்ட்சர்ச்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .
தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் , சரேல் எர்வீ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் டீன் எல்கர் 41 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து, 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. வெண்டர் டுசன் 13 ரன்னும், பவுமா 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வெண்டர் டுசன் 35 ரன்னிலும், பவுமா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜேன்சேன், மகாராஜ் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்
நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
Next Story






