என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை, ஒடிசா அணிகளின் வீரர்கள்
    X
    மும்பை, ஒடிசா அணிகளின் வீரர்கள்

    ஐ.எஸ்.எல் கால்பந்து: 7-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை சிட்டி

    இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர் கொள்கிறது
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. 

    மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இது மும்பை சிட்டி அணி பெற்றுள்ள 7-வது வெற்றி ஆகும். 

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×