search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வீரர்கள்
    X
    வீரர்கள்

    கடைசி ஓவரில 30 ரன் தேவை: ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விரட்டியும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்- இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 172 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஜேசன் ராய் 31 பந்தில் 45 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 26 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிறிஸ் ஜோடர்ன் 15 பந்தில் 27 ரன்னும் (2 பவுண்டரி, ஒரு சிச்கர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு ரன்னில் வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டது. இங்கிலாந்து வீரர் மெகமூத் வீசிய அந்த ஓவரின் முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் ரன் வரவில்லை. 2-வது, 3-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹூசைன் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார்.

    பந்தை விளாசும் ஷெப்பேர்டு

    4-வது பந்து வைடு ஆனது. கடைசி 3 பந்துகளில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள் அடித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஹூசைன் 16 பந்தில் 44 ரன் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஷெப்பேர்டு 28 பந்தில் 44 ரன் (ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அவரும் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    முதல் 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதற்கு இங்கிலாந்து தற்போது பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    Next Story
    ×