search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாபர் அசாம்
    X
    பாபர் அசாம்

    2021 ஐசிசி ஆடவர் அணி அறிவிப்பு- இந்திய வீர‌ர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை

    2021ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மட்டும் இடம்பெற்றுள்ளார்.
    துபாய்:

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அடிப்படையில், 2021ம் ஆண்டின் சிறந்த டி20 அணியின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 11 பேர் கொண்ட ஆடவர் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வீர‌ர் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அந்த அணியில் இருந்து பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் அப்ரிடி ஆகிய 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ரிஸ்வான் 1326 ரன்களும், பாபர் அசாம் 939 ரன்களும் சேர்த்துள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐசிசி அணியின் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீர‌ர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.

    ஐசிசி ஆடவர் அணி:

    பாபர் அசாம் (கேப்டன்), ஜோஸ் பட்லர், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, ஜோஷ் ஹேசில்வுட், வனிது ஹசரங்கா, முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஷாகீன் அப்ரிடி

    இதேபோல் ஐசிசி பெண்கள் டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டுமே இந்தியர் ஆவார். அவர் 9 போட்டிகளில் 255 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் டாப்-5 பட்டியலில் இடம் பிடித்தார். பெண்கள் அணிக்கு நாட் ஸ்கிவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    பெண்கள் அணி:

    நாட் ஸ்கிவர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, டாமி பியூமண்ட், டேனி வியாட், கேபி லூயிஸ், எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), லாரா வால்வார்ட், மேரிசான் கேப், சோஃபி எக்லெஸ்டோன், லோரின் ஃபிரி, ஷப்னிம் இஸ்மாயில்.
    Next Story
    ×