என் மலர்
செய்திகள்

நஜிபுல்லா ஜத்ரன்
நியூசிலாந்துக்கு 125 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான்
ஐந்தாவது வீரராக களம் இறங்கிய நஜிபுல்லா ஜத்ரன் 48 பந்தில் 73 ரன்கள் விளாச, ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஹஸ்ரதுல்லா ஜஸாய்- முகமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்.
ஜஸாய் 2 ரன்னிலும், முகமது ஷேசாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்பாஸ் 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 19 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு குல்பதின் நைப் உடன் நஜிபுல்லா ஜத்ரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக ஜத்ரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 73 ரன்கள் விளாசினார்.
அவரது அதிரடியால் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story






