என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து அணி
    X
    நியூசிலாந்து அணி

    நமீபியாவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

    பிலிப்ஸ், நீஷம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி 163 ரன்கள் குவித்ததால் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.
    டி20 உலக கோப்பையில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘சூப்பர் 12’ குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நமீபியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால், நமீபியா வெற்றி பெற்று இந்தியாவிற்கு ஒரு சாதகமான பாதையை அமைத்து கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் 4 ஓவரில் அந்த அணி 30 ரன்கள் அடித்தது. அதன்பின் தடுமாறியது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களே அடித்தது. 

    17-வது ஓவரில் இருந்து ஜேம்ஸ் நீசம், கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் நமீபியாவிடம் இருந்து விலகிச் சென்றது.

    17-வது ஓவரில் நியூசிலாந்து 14 ரன்களும், 18-வது ஓவரில் 21 ரன்களும், 19-வது ஓவரில் 14 ரன்களும், கடைசி ஓவரில் 18 ரன்களும் விளாசியது. கடைசி நான்கு ஓவரில் 67 ரன்கள் குவித்தது. இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கடெ் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்து விட்டது. இதனால் நமீபியா ஜெயிக்க வாய்ப்பில்லை என இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதேபோல் நமீபியா அணி 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நமீபியா அணியின் தொடக்க வீரர் லிங்கன் 25 ரன்களும், ஸ்டீபன் பார்ட் 21 ரன்களும், விக்கெட் கீப்பர் க்ரீன் 23 ரன்களும், டேவிட் வீஸ் 16 ரன்களும் சேர்த்தனர்.

    நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர், நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×