என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ஐ.பி.எல்.: இமாலய சாதனையை நோக்கி ரோகித் சர்மா

    இன்னும் 3 சிக்சர் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. இவர் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். களத்தில் சிறிது நேரம் நின்று விட்டால் வாணவேடிக்கை நிகழ்த்திவிடுவார்.

    அப்படிப்பட்ட ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் இதுவரை 397 சிக்சர்கள் விளாசியுள்ளார். இன்று ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மூன்று சிக்சர்கள் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைப்பார்.
    Next Story
    ×