என் மலர்

  செய்திகள்

  இன்சமாம்
  X
  இன்சமாம்

  நியூசிலாந்து தொடரை ரத்து செய்த விவகாரம்: ஐசிசி தலையிட வேண்டும் - இன்சமாம் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கிய நிலையில் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் கூறியுள்ளார்.

  கராச்சி:

  நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

  இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது.

  பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. உடனடியாக நியூசிலாந்து அணி அந்த நாட்டில் இருந்து விளையாடாமலேயே திரும்பியது.

  நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

  இந்த நிலையில் நியூசிலாந்து தொடரை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்- உல்-ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்கு செய்யாது. பாகிஸ்தான் எப்போதும் பிற நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். 1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கின. ஆனால் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம்.

  இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட வேண்டும். பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் இருந்தால் நியூசிலாந்து அதற்கான ஆதரத்தை காட்ட வேண்டும். ஆதாரத்தை காண்பிக்க மறுப்பது ஏன்?

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஆதாரத்தை காட்டவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்கலாம்.

  எங்களுடைய பிரதமர் இது தொடர்பாக பேசி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதியும் அளித்தார்.

  பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டிக்கு முந்தைய நாள் இதுபற்றி நியூசிலாந்து தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் என்ன பிரச்சினை என்றாவது நியூசிலாந்து கூறி இருக்க வேண்டும். நியூசிலாந்தின் இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  இவ்வாறு இன்சமாம்- உல்-ஹக் கூறி உள்ளார்.

  இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஐ.பி.எல்லில் விளையாடும் நியூசிலாந்து வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றனர்.

  Next Story
  ×