என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்ட நாயகன் விருது பெற்ற விஜய சங்கர்
    X
    ஆட்ட நாயகன் விருது பெற்ற விஜய சங்கர்

    விஜய் சங்கர், முருகன் அஷ்வின் அபாரம் - 11 ரன் வித்தியாசத்தில் மதுரையை வென்றது சேலம்

    சேலம் அணியில் அதிரடியாக ஆடிய முருகன் அஷ்வின் 12 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின. சேலம் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
     
    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 47 ரன்னில் அவுட்டானர். அதிரடியாக ஆடிய முருகன் அஷ்வின் 30 ரன்னும், கேப்டன் பெராரியோ 30 ரன்னும் எடுத்தனர்.

    மதுரை அணி சார்பில் சிலம்பரசன், கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் அனிருத் சீதா ராம் மட்டும் தாக்குபிடித்து ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வென்றது. ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×