search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரஜ்சோப்ரா - பஜ்ரங் புனியா
    X
    நீரஜ்சோப்ரா - பஜ்ரங் புனியா

    ஈட்டி எறிதல், மல்யுத்தம்: பதக்கம் வெல்லும் ஆர்வத்தில் நீரஜ்சோப்ரா, பஜ்ரங் புனியா

    இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்திய அணிக்கு மேலும் 2 பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட் டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் பெற்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்திய ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்று புதிய வரலாறு படைத்தது.

    இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்றைய போட்டி மூலம் இந்திய அணிக்கு மேலும் 2 பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். அவர் பங்கேற்கும் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்தார். முதல் முயற்சியிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார்.

    அவர் அதே முழு திறமையுடன் செயல்பட்டால் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.

    65 கிலோ பிரிவில் கலந்து கொண்ட அவர் முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரரையும், கால் இறுதியில் ஈரான் வீரரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் அஜர் பைஜான் வீரரிடம் தோற்றார். பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மோதுகிறார்.

    இதில் வெற்றி பெற்று அவர் வெண்கலப்பதக்கத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×