என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வீரர்கள்

    சதீஷ் அதிரடி - 36 ரன்கள் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிரடியாக ஆடிய சதீஷ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசி அசத்தினார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
     
    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. 

    முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ராஜகோபால் சதீஷ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளை எதிர்கொண்டு, 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    கோவை அணி தரப்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன், வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 4வது வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

    சாய் கிஷோர், ஹரிஷ்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×