என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மல்யுத்தம்- பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்6 Aug 2021 4:52 AM GMT (Updated: 6 Aug 2021 6:24 AM GMT)
கிர்கிஸ்தான், ஈரான் வீரர்களை வீழ்த்திய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்திற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாஸர் அக்மாட்டாலிவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 2-1 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் படும்படி அழுத்திப்பிடித்தார். இதனால் கீழே வீழ்த்திய முறையில் (Victory by Fall) பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்-ஐ எதிர்கொள்கிறார்.

Next Story
×