என் மலர்
செய்திகள்

200மீ ஓட்டத்தில் வென்றவர்கள்
பெண்கள் 200மீ ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை தாம்சன் ஹெரா தங்கம் வென்றார்
பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயத்தில் நமிபியா வீராங்கனை வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் கேப்ரியல் தாமஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 200மீ ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் பதக்கத்திற்காக ஓடினார்கள். இதில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்- ஹெரா பந்தய தூரத்தை 21.53 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நமிபியா வீராங்கனை கிறிஸ்டைன் 21.81 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்க வீராங்கனை கேப்ரியல் 21.87 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 800மீ ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை எதிங் மு பந்தய தூரத்தை 1:52.21 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீராங்கனை கீலி ஹாட்கின்சன் 1:55.88 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை ரயேவின் ரோஜர்ஸ் பந்தய தூரத்தை 1:56.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
Next Story






