என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
டோக்கியோ ஒலிம்பிக்: ஜூடோ அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனை விவரம்
பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 989 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆசிய மண்டல அளவில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் சுஷிலா தேவி அந்த மண்டல கோட்டாவின் அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஜூடோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மணிப்பூரை சேர்ந்த 26 வயது ஜூடோ வீராங்கனை சுஷிலா தேவி தகுதி பெற்று இருக்கிறார். பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் 989 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆசிய மண்டல அளவில் 7-வது இடத்தை பிடித்து இருக்கும் சுஷிலா தேவி அந்த மண்டல கோட்டாவின் அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆசிய மண்டலத்தில் இருந்து மொத்தம் 10 பேர் தகுதி பெற முடியும். அதில் ஒரு நாட்டுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும். சுஷிலா தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.
Next Story






