என் மலர்
செய்திகள்

பென் ஸ்டோக்ஸ்
3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா: புதிய அணியை களம் இறக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு திட்டம்
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியை எதிர்த்து விளையாட இருந்த இங்கிலாந்து அணியில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ஒயிட்பால் கிரிக்கெட் அணி இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறது. 2-வது போட்டி 10-ந்தேதியும், 3-வது போட்டி 13-ந்தேதியும் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 48 மணி நேரமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருக்கும், நிர்வாகத்தின் ஸ்டாஃப்கள் நான்கு பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் அணியில் இடம் பிடித்த வீரர்கள் ஆகியோரை தனிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு புதிய அணியை பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறக்கிறது. அந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடிய பின்னர், இங்கிலாந்து அணிக்காக விளையாடாமல் உள்ளார்.
இதனால் அவர் மற்ற வீரர்களிடம் இருந்து விலகியே உள்ளார். இதனால் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை.
Next Story






