search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றியை கொண்டாடும் செக் குடியரசு வீரர்கள்
    X
    வெற்றியை கொண்டாடும் செக் குடியரசு வீரர்கள்

    யூரோ கோப்பை - செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு தகுதி

    யூரோ கோப்பை கால்பந்தில் நெதர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது செக் குடியரசு அணி.
    புடாபெஸ்ட்:

    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் செக் குடியரசின் தாமஸ் ஹோல்ஸ் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 80-வது நிமிடத்தில் பாட்ரிக்ஸ் ஷிக் கோல் அடித்தார்.

    முன்னதாக 55-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் நெதர்லாந்து வீரர் மாத்திஸ் டி லிட் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடியதால் நெதர்லாந்தின் பின்கள தடுப்பு பலவீனமடைந்தது.

    இறுதியில், செக் குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    காலிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம் அணி

    இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம், போர்ச்சுக்கல் அணிகள் மோதின. முதல் பாதியின் 42வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் தோர்கன் ஹசார்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

    இறுதியில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
    Next Story
    ×