search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜர் பெடரர்
    X
    ரோஜர் பெடரர்

    பிரெஞ்சு ஓபன் - ஜெர்மனி வீரரை போராடி வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார் பெடரர்

    பிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்றுக்கு ரபேல் நடால் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறினர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர்.

    இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.

    இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×