search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாஹல்- குல்தீப் யாதவ்
    X
    சாஹல்- குல்தீப் யாதவ்

    ஜடேஜா மிதவேக பந்து வீச்சாளராக இருந்திருந்தால் நாங்கள் இருவரும் இணைந்து விளையாடியிருக்கலாம்- சாஹல்

    அஷ்வின்- ஜடேஜா ஜோடிக்குப்பிறகு ஒயிட் பால் கிரிக்கெட்டில் சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடி நீண்ட காலமாக இணைந்து விளையாடியது.
    இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வந்தனர். இடையில் இருவருடைய பந்து வீச்சிலும் தொய்வு ஏற்பட்ட சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடி ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்கான அணியில் இடம் பிடித்தனர்.

    இங்கிலாந்தில் 2019-ம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இருவரும் இணைந்து விளையாடினார்கள். ஒரு போட்டியில் சாஹல் 10 ஓவரில் 88 ரன்களும், குல்தீப் யாதவ் 72 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து விளயாடவில்லை. மேலும் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைய, ஜடேஜா மீண்டும் ஒயிட்-பால் அணிக்கு திரும்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.

    இந்த நிலையில் சாஹலிடம் குல்தீப் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாஹல் பதில் அளிக்கையில் ‘‘நானும், குல்தீப் யாதவும் அணியில் விளையாடும்போது, ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்தார். அவர் பந்து வீசுவார். 2018-ல் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தபோது, ஜடேஜா மீண்டும் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு திரும்பினார். அவர் ஆல்ரவுண்டராக, 7-வது இடத்திலும் பேட்டிங்கும் செய்வார். துரதிருஷ்டவசமாக அவர் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவிட்டார். அவர் மிதவேகப் பந்து வீச்சாளராக இருந்திருந்தால் நாங்கள் இருவரும் இணைந்து விளையாடியிருக்கலாம். அது அணிக்கு தேவையாக இருந்தது.

    சாஹல்- குல்தீப் யாதவ்

    குல்தீப் யாதவும் நானும் ஒரு தொடரில் 50-50 என்ற அளவில் போட்டிகளில் விளையாடியிருப்போம். சில நேரம் அவர் 5 போட்டியில் 3 போட்டிகளில் விளையாடியிருப்பார். நான் வாய்ப்பு பெற்றிருப்பேன். அணிக்கு காம்பினேசன் தேவை. 11 வீரர்கள் அணியை உருவாக்க முடியும். குல்சா (Kulcha) அணியை உருவாக்க முடியாது. ஹர்திக் பாண்ட்யா இருக்கும் வரை எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அணிக்கு 7-வது இடத்தில் ஆல்-ரவுண்டர் தேவைப்பட்டது. நான் அணிக்காக விளையாட வில்லை என்றாலும், அணி வெற்றி பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடியை குல்சா என செல்லமாக அழைப்பார்கள்.
    Next Story
    ×