search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேர்ஸ்டோவ்
    X
    பேர்ஸ்டோவ்

    ஐபிஎல் போட்டியில் விளையாடிய 8 இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றடைந்தனர்: ஆஸி. வீரர்கள் காத்திருப்பு

    பயோ-பபுள் வெடித்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த வரும் நிலையில், கடந்த மாதம் 9-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதலில் சென்னையிலும் மும்பையிலும் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்கள் பயோ-பபுள் வளையத்திற்குள் பாதுகாப்பாக இருந்து விளையாடினர்.

    அதன்பின் போட்டிகள் டெல்லியிலும், அகமதாபாத்திலும் நடைபெற்றன. இரு மாநிலத்திலும் கொரோனாவின் வீரியம் அதிகமான இருந்தது. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான பயோ-பபுள் வெடித்து வீரர்களை கொரோனா தொற்று தாக்க ஆரம்பித்தது.

    முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி உள்பட இருவர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அமித் மிஷ்ராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை அணியின் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதனால் ஐபிஎல் போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்கள் அதிக அளவில் விளையாடினார்கள்.

    அவர்கள் சொந்த நாடு திரும்ப விரும்புகிறார்கள். பிசிசிஐ-யும் அதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்தைச் சேர்ந்த 8 வீரர்கள் (பட்லர், பேர்ஸ்டோ, சாம் கர்ரன், டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, ஜேசன் ராய்) லண்டன் திரும்பியுள்ளனர்.

    அவர்கள் அந்நாட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் வீட்டிற்குச் செல்வார்கள். மோர்கன், தாவித் மலான், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் இன்னும் 48 மணி நேரத்திற்குள் இங்கிலாந்து புறப்பட இருக்கிறார்கள்.

    பட்லர்

    ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக சொந் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதல், மாலத்தீவு சென்று, அங்கு சில நாட்கள் தனிமையில் இருந்து கொண்டு, அதன்பின் அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறார்கள். இதற்கான பணிகளை பிசிசிஐ செய்து வருகிறது.

    மாலத்தீவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் பறந்துவிடுவார்கள்.
    Next Story
    ×