search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய முசாராபானியை பாராட்டும் சக வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய முசாராபானியை பாராட்டும் சக வீரர்கள்

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்- ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 131 ரன்னில் ஆல் அவுட்

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.
    அபுதாபி:

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அப்துல் மாலிக், ஆபிரகாம் சட்ரன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சசாய் 37 ரன்னும், சட்ரன் 31 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், நிவாசி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் சீன் வில்லியம்சும், சிக்கந்தர் ராசாவும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.  சிக்கந்தர் ராசா 43 ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அமீர் ஹம்சா 4 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×