search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய கார்ன்வால்
    X
    5 விக்கெட் வீழ்த்திய கார்ன்வால்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் - வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல் அவுட்

    டாக்காவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்துள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போனர் 90 ரன்னிலும், சில்வா 92 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 82 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 409 ரன்கள் குவித்தது.
     
    வங்காளதேசம் அணி சார்பில் அபு ஜயத், தைஜுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 71 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. அந்த அணியின் ரஹிம் 54 ரன்னும், விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ் 71 ரன்னும், மெஹிதி ஹசன் 57 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வங்காளதேசம் 296 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கார்ன்வால் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 113 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    Next Story
    ×