search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது ரிஸ்வான்
    X
    முகமது ரிஸ்வான்

    முகமது ரிஸ்வான் அபார சதம்: தென்ஆப்பிரிக்காவுக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

    ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் பாபர் அசாம் (77), பஹீம் அஷ்ரப் (78 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 272 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 201 ரன்னில் சுருண்டது.

    இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடக்க வீரர் இம்ரான் பட் (0), அபித் அலி (13), அசார் அலி (33), பாபர் அசாம் (8), ஃபவாத் அலாம் (12), பஹீம் (29) முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களே எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 28 ரன்களுடனும், ஹசன் அலி ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 200 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹசன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் ஷா 23 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் முகமது ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ரன்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்கா நிர்ணயித்துள்ளது.
    Next Story
    ×