search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த மார்கிராம்
    X
    அரைசதம் அடித்த மார்கிராம்

    கராச்சி டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 187/4

    பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 220 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ஃபவாத் ஆலமின் (109) சதத்தால் 378 ரன்கள் குவித்தது.

    158 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டீன் எல்கர் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து எய்டன் மார்கிராம் உடன் வான் டெர் துஸ்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.  அணியின் ஸ்கோர் 175 ரன்னாக இருக்கும்போது வான் டெர் துஸ்சன் 64 ரன்னில் வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், மார்கிராம் 74 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 10 ரன்னுக்குள் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டை இழந்தது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை தென்ஆப்பிரிக்கா 29 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. டி காக் சிறப்பாக விளையாடினால் சவால் கொடுக்கக் கூடிய ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா அணி எட்ட வாய்ப்புள்ளது.
    Next Story
    ×