என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X
    கிறிஸ்டியானோ ரொனால்டோ

    இன்ஸ்டாகிராமில் 25 கோடி பாலோவர்ஸ்: கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

    இன்ஸ்டாகிராமில் உலகிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்ட நபர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
    கால்பந்து உலகில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான இவர் மான்செஸ்டர் யுனெடெட், ரியல் மாட்ரிட் ஆகிய கிளப் அணிகளுக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார்.

    தற்போது இத்தாலியின் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள். இவர் சமூக வலைத்தளங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் எண்ணிக்கை 250 மில்லியனை கடந்துள்ளது. இதன் மூலம் 25 கோடி பாலோவர்ஸ் வைத்துள்ள ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    Next Story
    ×