என் மலர்tooltip icon

    செய்திகள்

    கென்டோ மெமோட்டா
    X
    கென்டோ மெமோட்டா

    ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டா-வுக்கு கொரோனா: ஒட்டுமொத்த வீரர்களும் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகல்

    ஜப்பான் பேட்மிண்டன் வீரர் கென்டோ மொமொட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தாய்லாந்து ஓபனில் இருந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த வீரர்களும் விலகியுள்ளனர்.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகிற 19-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்கான நம்பர் ஒன் வீரரான கென்டோ ஜப்பான் வீரர் மொமோட்டோ, சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தாய்லாந்து செல்வதற்காக ஜப்பான் விமான நிலையம் சென்றார்.

    அப்போது கென்டோவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாசிட்டிவ் முடிவு வந்தது. ஆனால் அவருடன் வந்த மற்ற 22 வீரர்களுக்கும் கொரோனா இல்லை. இருந்தாலும் ஜப்பான் பேட்மிண்டன் சங்கம் ஒட்டுமொத்த வீரர்களும் தொடரில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    கென்டோ கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கினார். அதன்பின் தற்போதுதான் வெளிநாடு சென்று விளையாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×