என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி 3-வது வெற்றி பெறுமா? ஐதராபாத்துடன் நாளை மோதல்

    ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியின் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட் டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது.

    சென்னையின் எப்.சி. 8 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 9-வது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை நாளை இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் சென்னை அணி முன்னேற்றம் அடையும். ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

    நேற்று நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. அந்த அணி 6 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    மோகன் பகான் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கோவா 14 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஜாம்செட்பூர் 13 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா (மாலை 5 மணி), மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் -கவுகாத்தி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×