என் மலர்
செய்திகள்

மேற்கு வங்காள மாநில கவர்னருடன் கங்குலி சந்திப்பு
மேற்கு வங்காள கவர்னருடன் பிசிசிஐ தலைவர் கங்குலி சந்திப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலியுடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடியதாக, மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெக்தீப் தன்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மேற்கு வங்காளத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான சவுரவ் கங்குலி இருந்து வருகிறார்.
இவர் இன்று மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெக்தீப் தன்காரை சந்தித்துள்ளார். இதுகறித்து கவர்னர் கூறுகையில் ‘‘பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடப்பட்டது. 1864-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் பழமையான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான் அவரது அழைப்பு ஏற்றுக் கொண்டேன்’’ என்றார்.
Next Story






