என் மலர்
செய்திகள்

தினேஷ் கார்த்திக்
சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்?
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான போட்டித் தொடர் வருகிற ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டித் தொடருக்கான தமிழ்நாடு அணி இன்று அறிவிக்கப்படுகிறது.தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை கேப்டனாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கே.விக்னேஷ் கொரோனா பரிசோதனையை கடந்துள்ளதால் அணியில் இடம் பெறுவார்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் கிறிஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளரான அவர் முதுகு வலி காரணமாக நியூசிலாந்தில் ஆபரேஷன் செய்து குணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






