என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருணால் பாண்ட்யா
    X
    குருணால் பாண்ட்யா

    மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட குருணால் பாண்ட்யா

    மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவை வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மும்பை:

    ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

    இந்நிலையில், குருணால் பாண்ட்யா துபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில், மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார்.

    அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    அமீரகத்தில் அண்மையில் நிறைவு பெற்ற 2020-க்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக  குருணால் பாண்ட்யா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×