search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2020
    X
    ஐபிஎல் 2020

    துபாயில் 15 சதவீத கேட்ச்கள் மிஸ்சிங்: டாஸ் வெற்றி போட்டியில் தோல்வி- ஐபிஎல் சுவாரஸ்ய தகவல்

    அபு தாபி, ஷார்ஜாவை விட துபாய் மைதானத்தில் அதிகமான கேட்ச்களை பீல்டர்கள் பிடிக்க தவறியுள்ளனர். இதற்கு ‘பையர் ஆஃப் ரிங்’ காரணம் என கூறப்படுகிறது.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. மூன்று மைதானங்களில் போட்டிகளில் நடைபெறும் நிலையில் பல சுவாரஸ்யமான, கவலை அளிக்கும் விதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    பொதுவாக பவர் பிளேயில் வேகப்பந்து வீச்சை துவம்சம் செய்தால், உடனடியாக சுழற்பந்து வீச்சை களம் இறக்குவார்கள். ஆனால். இந்த முறை 11.10 சதவீதம் மட்டுமே சுழற்பந்து வீச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 2019-ல் 24.30 சதவீதம், 2018-ல் 32.60 சதவீதம், 2017-ல் 25.70 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பவர் பிளே-யில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    11 போட்டிகள் முடிவதற்குள் ஒவ்வொரு அணியும் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2009-ல் 10 போட்டிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. அதன்பின் 2016-ல் 12, 2017-ல் 13, 2018 14 போட்டிகள் முடிவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்தத் தொடர் மிகவும் போட்டியான தொடராக இருக்கும் என கருதப்படுகிறது.

    12 போட்டிகள் முடிவில், 11 முறை டாஸ் வென்ற அணி பீல்டிங் கேட்டுள்ளது. இதில் இரண்டு முறையே டாஸ் வென்ற அணி வெற்றி வாகை சூடியுள்ளது. டாஸ் வென்றாலும் போட்டியில் தோல்வியடைந்த நிலையே ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு சீசனில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த முறை அது பலன் அளிக்கவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் தோல்வியை சந்தித்தது.

    இந்த முறை டெத் ஓவரில் பந்து வீச்சாளர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது, கடைசி நான்கு ஓவர்களில் அதிகபட்சமாக 79 ரன்கள் விளாசப்பட்டது. சராசரியாக அணிகள் 11.94 ரன்கள் அடித்துள்ளது. தற்போது வரை டெத் ஓவர்களில் 70 சிக்ஸ், 74 பவுண்டரிகளில் அடிக்கப்பட்டுள்ளனர். இந்த ரன்ரேட் இதுவரை நடைபெற்ற தொடர்களில் அதிகம்.

    மூன்று மைதானங்களில் சிக்ஸ், பவுண்டரிகள் சென்றதில் வித்தியாசம் உள்ளது. ஷார்ஜாவில் சராசரியாக 8 பந்திற்கு ஒரு சிக்ஸ் பறந்துள்ளது. துபாயில் 20 பந்திற்கு ஒரு சிக்சரும், அபு தாபியில் 23 பந்திற்கு ஒரு சிக்சர்தான் சென்றுள்ளது. பவுண்டரி ஷார்ஜா மற்றும் துபாயில் 9 பந்துக்கும், அபு தாபியில் 10 பந்துக்கும் அடிக்கப்பட்டுள்ளது.

    கேட்ச் மிஸ்சிங்கை பொறுத்த வரைக்கும் துபாய் மைதானம் மிக மோசம். இதற்கு காரணமாக மைதானத்தில் உள்ள விளக்கு கோபுரத்தை சொல்கிறார்கள். மிகப்பெரிய மைதானத்தில் அமைந்துள்ள விளக்கு கோபுரங்களை ரிங் ஆப் பையர் என்று அழைப்பார்கள்.

    துபாயில் 67 கேட்ச் வாய்ப்பில் 10 தவிறியுள்ளன. அபு தாபியில் 37 வாய்ப்புகளில் 3 தவறியுள்ளன. ஷார்ஜாவில் 18 கேட்ச்களில் 2 தவறியுள்ளன.

    இதுவரை கடைசி ஓவரில் 292 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. இது சராசரி 14.24 ஆகும். 15 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    Next Story
    ×