என் மலர்
செய்திகள்

நவோமி ஒசாகா
உலக டென்னிஸ் தரவரிசையில் நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.
அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடம் பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

Next Story