என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2020
    X
    ஐபிஎல் 2020

    சிஎஸ்கே அணியைத் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா

    ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிசிசிஐ மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்பட 8 அணிகளும் அங்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன.

    கடந்த வாரம் 3-வது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு கொரோனால் இல்லை. இதனால் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘‘இது உண்மைதான். ஆனால் சீனியர் மருத்து அதிகாரியால் எந்த பிரச்சினையும் இல்லை. அறிகுறி இல்லாத கொரோனா தொற்றுதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் யாருடன் தொடர்வில் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் பயணம் போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    அவர் கண்காணிப்பில் உள்ளார். அடுத்த சுற்று பரிசோதனையின் போது அவர் குணமடைந்துவிடுவார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ,-க்கு தகவல் கிடைத்துள்ளது.
    Next Story
    ×