search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
    X
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

    31-ந்தேதி வரை மைதானங்கள் திறப்பு இல்லை: வீரர், வீராங்கனைகளின் பயிற்சி மேலும் தாமதம்

    சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஜூலை 31-ந்தேதி வரை திறக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

    ஆனால் தமிழ்நாட்டில் வீரர் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஸ்டேடியஙகள்  திறக்கப்படவில்லை.

    பயிற்சிக்காக மைதானங்களை திறக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் (எஸ்.டி.ஏ.டி) தொடர்ந்து வலியுறுத்தினர்.

    சென்னையில் முழுமையான ஊரடங்குக்கு முன்பு நேரு ‘பி’ ஸ்டேடியம்  மட்டும் திறக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதிக்கு பிறகு அதுவும் மூடப்பட்டது. விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க மாநில அரசு கடந்த 3 தினங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

    ஆனால் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ம்தேதி வரை விளையாட்டு மைதானங்கள் திறப்பு  இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் வீரர் வீராங்கனைகள் பயிற்சி மேலும் தாமதமாகிறது.

    தொடர்ந்து ஸ்டேடியங்கள் மூடப்பட்டிருக்கும் போது வீரர், வீராங்கனை பயிற்சி பெறமுடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை ஆக்கி சங்க தலைவரும், முன்னாள் வீரருமான வி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்..

    ஸ்டேடியங்கள் மீண்டும் திறக்கப்படும்போது அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி வீர வீராங்கனைகள் பயிற்சி பெற வேண்டும்.

    தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 64,689 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது.
    Next Story
    ×