search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர்
    X
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர்

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகிறது

    கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கும் முடிவில் இங்கிலாந்து உள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வர நீண்ட காலமாகும் என அஞ்சப்படுகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றிருந்தது. ஆனால் கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக பயிற்சி ஆட்டத்தை பாதிலேயே நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பியது.

    இங்கிலாந்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா வைரசால் இந்தத் தொடர்கள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கொண்ட ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்கள் ஜூலை மாதம் 3-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் நடைபெற சாத்தியமில்லை. ஒருவேளை குறிப்பிட்ட போட்டி அட்டவணைக்குள் நடைபெறாவிடில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை நடத்த முடியும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

    ஆறு போட்டிகளையும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடத்தும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு புதிய தேதியை முன்வைத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×