என் மலர்
செய்திகள்

புஜாரா
சமூக வலைத்தளத்திற்காக பேட்டிங் செய்ய முடியாது: புஜாரா
டெஸ்ட் போட்டியில் அதிகமான பந்துகளை சந்திக்கிறார் என்ற விமர்சனம் எழும் நிலையில், அதுபற்றி கவலை இல்லை என்கிறார் புஜாரா.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. இவர் நிலைத்து நின்று விளையாடக்கூடியவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு போதும்போதும் என்ற நிலை ஏற்படும்.
என்றாலும் மெதுவாக விளையாடுவது குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களுக்காக பேட்டிங் செய்ய இயலாது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘முதல் இன்னிங்சில் நான் 200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து 60 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் எனக்கும், அணியின் சக வீரர்களுக்கும் ஆடுகளம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது தெரியும். நான் விளையாடியது இறுதி போட்டி. பொறுப்பு என்மீது இருந்தது. சூழ்நிலை சார்ந்திருந்தால் இதுபோன்று மெதுவாக பேட்டிங் செய்வது தவறு அல்ல.
நான் சர்வதேச பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள் 110 கிமீட்டர் வேகத்தில்தான் பந்து வீசுகிறார்கள். அதனால் எப்படியும் விளையாடலாம் என்ற ஈகோவை நான் பின்னுக்குத் தள்ளிவிடுவேன். சூழ்நிலை சரியில்லை என்றால் நான் எனது வழக்கமான ஷாட்டுகளை எளிதாக அடிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். கேம் சேஞ்ச் என்பது பிட்ச்-ஐ பொறுத்தது. நியூசிலாந்து தொடரை எடுத்துக் கொண்டால், ஆடுகளம் மிகவம் சவாலாக இருந்தது.
நான் சமூக வலைத்தளங்களுக்காக பேட்டிங் செய்ய முடியாது. ஏராளமானவர்களால் எனது ஆட்டம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் அதிக அளவில் ஒயிட்-பால் கிரிக்கெட்டை பார்க்கிறார்கள். என்னுடைய இலக்கு சிலரை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதல்ல. அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. அது இந்திய அணியாக இருக்கலாம். அல்லது சவுராஷ்டிரா அணியாக இருக்கலாம்.
சில நாட்களில் நான் வேகமாக பேட்டிங் செய்வேன். சில நேரங்களில் மெதுவாக பேட்டிங் செய்வேன். கிரிக்கெட்டை விரும்புவர்களுக்கும், ரசிகர்கள் கூட்டத்திற்கும் மரியாதை அளிக்கிறேன். மற்ற நபர்கள் போன்று என்னால் சிக்ஸ் அடிக்க இயலாது. நான் சமூக வலைத்தளங்களை தவிர்க்க விரும்புகிறேன். விளையாடும்போது அவற்றை பார்ப்பதில்லை. நான் மற்றவர்கள் சந்தோசப்படுவதற்காக பேட்டிங் செய்யவில்லை’’ என்றார்.

Next Story