search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர் ஷிவபால்
    X
    இந்திய வீரர் ஷிவபால்

    ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் ஷிவபால் தகுதி

    2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஈட்டி எறியும் வீரர் ஷிவபால்சிங் தகுதி பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதிவரை நடக்கிறது.

    ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஈட்டி எறியும் வீரர் ஷிவபால்சிங் தகுதி பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் அவர் 85.47 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது 5-வது முயற்சியில் இதை தொட்டு ஒலிம்பிக்குக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது ஈட்டி எறியும் வீரர் ஷிவபால் ஆவார். ஏற்கனவே நீரஜ் சோப்ரா தகுதி பெற்று இருந்தார். நீரஜ் கடந்த ஜனவரி மாதம் 87.86 மீட்டர் தூரம் எறிந்து இருந்தார்.

    தடகளத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவினாஷ் சாப்ளே (3 ஆயிரம் மீட்டர்), ஸ்டீபிள் சேஸ், இர்பான், (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), பாவ்னா ஜாட் (பெண்கள் 20 கிலோ மீட்டர் நடை பந்தயம்), ஆகியோர் முன்னேறி இருந்தனர். இதேபோல 4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா தகுதி பெற்று இருந்தது.

    வில்வித்தையில் இருந்து 4 பேரும், குத்துச்சண்டையில் 8 பேரும், துப்பாக்கி சுடுதலில் 15 பேரும், மல்யுத்தத்தில் 4 பேரும், குதிரையேற்றத்தில் ஒருவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதே போல ஆக்கி ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தகுதி பெற்றுள்ளது.

    Next Story
    ×